discussssions

Wednesday, August 17, 2022

 

நம் தலைமுறை இழந்த மீன்கள்:

முக்கூடற்பள்ளு மழைபொழிந்து ஆற்றில் புதுவெள்ளம் பெருகுகையில், பொருநையாற்றிலும் சித்திரா நதியிலும் வரும் மீன்களாக கீழ்க்கண்ட மீன்இனங்களை பற்றி கூறுகிறது.
 
 

 
துதிக்கைமூக்கன், பசலி, கெளுத்தி, மகரம், உல்லம், கடந்தை, மலங்கு, பரவை, உழுவை, ஆரால், கெண்டை, பண்ணைச்சாளை, திருக்கை, பண்ணாக்கு, சள்ளை, பொத்தி, சம்பான், பஞ்சலை, குரவை, தேளி, அயிந்தி, ஓராமீன், கெளிறு, எண்ணைமீன், கசலி, பழம்பாசி, மடந்தை, நொறுக்கி, கருங்கண்ணி, வாளை, மயிந்தி, மணலி, அயிரை, வரால்
இதுதவிர வையாபுரிபள்ளு எனும் சிற்றிலக்கியம் சண்முகநதி பெருகி புதுவெள்ளம் பெருகுகையில்
படலை, பயிந்தி, மூக்கை, பெருக்கை, படலி, பனசை, எரிகண்ணன், பொத்தி, கரைவாசன், செள்ளை, சள்ளை, கோளை,
முதலிய மீன்களையும் கூறுகிறது.
 

0 கருத்துகள்:

Post a Comment