சமீபத்தில் கலைமணி அம்பலம் வல்லாள மகாராஜா கள்ளர் சமூகம் என உங்கள் வலையொளி பேசு தமிழா பேசுவில் பேட்டி கொடுத்து இருந்தார். மகிழன் பேட்டி எடுத்து இருந்தார்.
அடிப்படையில் இதனை வன்னியர் மக்கள் அட இவர்களுக்கு இதே வாடிக்கை என கடந்து சென்று இருப்போம் எடுத்துக்காட்டாக உங்கள் மற்றொரு வலையொளியில் மன்னர் மன்னன் பல்லவனையே கள்ளர் என கூறி இருந்தார் .. இப்படியே நாளை காடுவெட்டி குருநாத தேவர் கூட தேவர் பட்டம் இருக்கு அதனால் முக்குலம் அப்பறம் சிறிது காலம் கழித்து கள்ளர் என நிறுவினால் என்ன செய்வது என எண்ணி பார்க்கும் பொழுது , "அப்படியே தலை சுத்திக்கிச்சு" அதனால் முதல் படியாக விளக்கங்கள் மட்டும் கேட்டு இருக்கிறோம்.
நன்கு கற்று அறிந்து கேள்விகளையும் கேட்பதிலும் சில நேரங்களில் பதில்களை மறுப்புகளையும் செய்வதில் மகிழன் வல்லவர் ,மக்கள் மன்றத்தில் நல்ல நம்பிக்கை பெற்றவர். ஏனோ கலைமணி அம்பலம் பேட்டியில் சில விடயங்களை கேள்வி கேட்பதற்கு தவற விட்டு விட்டார். சரி அது அவருடைய விருப்பம்.
கலைமணி ,வல்லாள பட்டி (அ)வல்லாளப்பட்டு (அ) வல்லாளப்பட்டி யில் வல்லாளன் வம்சம் இருகின்றனர் அதற்க்கு அந்த ஊரின் பெயர் தான் காரணம் ,அவ்வூர் கள்ளர் வசிக்கிறார்கள் அதனால் வல்லாளன் ஒரு கள்ளன் என கூறி இருந்தார்.
அதன் அடிப்படியில் எ வல்லாள பட்டி மேலூர் அருகே எங்க இருக்கு என்று தேட ஆரம்பித்தோம் , கிடைக்கவில்லை , எ வெள்ளாளப்பட்டி டி வெள்ளாளப்பட்டி தான் கிடைத்தது. கீழே முதலில் விக்கி பக்கமும் அதன் தொடர்ச்சியாக படங்களுடன் இணைப்பை அளித்துள்ளோம்.
எங்கள் தரப்பு, அதாவது வன்னியர் ( பள்ளி ) சாதி (அ) குடி ,தரப்பு வாதங்களை வைக்க வல்லாள பட்டு எங்கே இருக்கு என்று கூறுங்கள். ஒரு வேலை வரலாற்றின் முற்பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றால் எங்களை வழி நடத்துங்கள்.நீங்க ஒளிபரப்பியதால் அறத்தின் பால் முதலில் உங்களிடம் கேட்டு விட்டு பதில் இல்லை என்றால் கலைமணியிடம் கேட்கிறோம்.